பரமு ஜோக்ஸ்

Posted by AN Rayen Wednesday, April 14, 2010


பரம்ஸ் அரபு நாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கி இரண்டு பெரிய சூட்கேசுகளுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்,. அப்போது அங்கே வந்த மாசி கேட்டார்.. " மணி என்ன ஐயா?"பரம்ஸ் இரண்டு சூட்கேசுகளையும் கீழே வைத்து விட்டு தன் மணிக்கட்டைத் திருப்பி பார்த்து விட்டு.."ஆறாக 10 நிமிடம் இருக்கு"."வாவ். உங்க கடிகாரம் நல்லா இருக்கு . எங்க வாங்கினீங்க்?""நன்றி. இது நானே டிசைன் பண்ணின கடிகாரம்... இங்க பாருங்க" என்று தன் வாட்சைக் காட்டினார் பரம்ஸ். ஒரு பொத்தானை அமுக்க அமுக்க உலகின் உள்ள எல்லா நேரங்களையும் நொடி மாறாமல் காட்டுவதுடன், உலகில் உள்ள 86 மெட்ரோ நகரங்களில் நேரம் மற்றும் தட்ப வெப்பம் காண்பித்தது அந்த வாட்ச். அதே பொத்தானை மீண்டும் அமுக்க அமுக்க உலகின் பல்வேறு மொழிகளிலும் பலவிதமான அழகிய குரல்களில் அந்த கடிகாரம் நேரம் சொன்னது. இதை பார்த்த மாசிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். "அட இது மட்டுமில்ல. இதுல இந்த புள்ளி வந்து GPS சாட்டிலைட் மூலமா நான் எங்க இருக்கிறேன் என்று டிராக் பண்ணிக்கொண்டே இருக்கும்". அதோட பல நகரங்களின் தெளிவான வரைபடம்(map), இரவு விளக்கு, மேப்பை பக்கத்தில் இருக்கும் சுவற்றில் பெரிதாக்கி தெரிய வைக்கும் புரொஜெக்டர் திறன், அதில் இருந்த லேசர் பாயிண்டர் இன்னும் என்னென்னமோ காட்டினார். பார்த்த மாசி அசந்து போய் விட்டார்."நீங்களே டிசைன் பண்னினது என்று சொன்னீங்களே? இத எனக்கு விலைக்குத் தருவீங்களா???""இல்ல . இன்னும் இது மார்க்கட்டுக்காக ரெடி ஆகவில்லை. இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் சரி செய்ய வேண்டி இருக்கு""நீங்க வேற தயார் பண்ணிக்கோங்க.. . இந்த கடிகாரத்தை எனக்கு விலைக்கு தாங்க""இல்லை ஐயா""ரூ. 10 ஆயிரம் தர்றேன் சார்""அட இது இன்னும் விற்பனைக்கு ரெடி ஆகவில்லை""சரி. ஒரே விலை 15000'"சொன்னா கேளுங்க..""ம்ஹீம். 25000 ரூபாய்.. இப்பவே தாங்க""இல்ல....""ம் . ஒண்ணும் பேசாதீங்க. 40000. இப்ப என்ன சொல்றீங்க?""அட உண்மையாவே இது இன்னும் முழுசா.....""ரெடி ஆகலேன்னு தானே சொல்ல வர்றீங்க்? ஒண்ணும் பேசாதீங்க. கடைசி விலை 50,000. எனக்கு நீங்க இத கொடுத்தே தான் ஆகணும். இவ்வளாவு விரும்பி கேட்கிறேன்"பரம்ஸ் யோசித்து பார்த்தார். இது வரை இவர் இந்த வாட்ச்சுக்கு செலவழித்தது ரூ.10000 மற்றும் 2 வருட உழைப்பு. இவர் தரும் பணமோ 50000. இதற்கு மேல் மறுக்க வழி இல்லாமல் பரம்ஸ் அவரிடம் இருந்து 50000 வாங்கிக் கொண்டு கடிகாரத்தைக் கழட்டிக் கொடுத்தார். வாங்கிய மாசி ஆனந்தமாய் கையில் கட்டிக் கொண்டு நன்றி செலுத்தி விட்டு வேகமாய் கிளம்பினார்."ஹலோ ஒரு நிமிசம்" என்று பரம்ஸ் கூப்பிட்டார் .கடிகாரத்தை வாங்கிய மாசி, "அடடா அதுக்குள்ள இவர் தன் மனச மாத்திகிட்டாரோ என பயந்த படி திரும்ப பரம்ஸ் அவரிடம் அந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களை காட்டி சொன்னார்...."அந்த வாட்ச்சோட பேட்டரிகளை மறந்துட்டுப் போறீங்களே?"

0 Responses to பரமு ஜோக்ஸ்

Post a Comment

Powered by Blogger.