• +2 தேர்வில் தூய தோமையார் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி
 2009-10 ம் ஆண்டிற்கான +2 தேர்வு முடிவுகள் மே 15 ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் நமதூரின் தூய தோமையார் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளார்கள். மேலும் 12 மாணவ,மாணவியர்கள் 1000க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். அனைவருக்கும்,நற்பணி புரிந்த ஆசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  •   நமதூரில் ஐவர் கால்பந்தாட்டப் போட்டி துவக்கம்
நமதூரை சார்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் குழு சார்பாக,12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான (நமதூர் மாணவர்கள் மட்டும்) உள்ளூர் அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகள் 16-5-2010 அன்று முடிவடைந்த நிலையில்,இறுதிப்போட்டி வரும் 23-5-2010 அன்று நடைபெற இருக்கிறது.

  
  •  புதிய துணை பங்குத்தந்தை பதவியேற்பு  
நமதூரில் கடந்த ஒரு வரு காலமாக உதவி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்திரு.ஜோ அடிகளார் அவர்கள் தூத்துக்குடி  துறைமுக பங்குக்கு மாற்றலாகி செல்கிறார்.அவருக்கு மாற்றலாக புதிய துணைப்பங்குத்தந்தையாக அருட்திரு.ராஜன் அடிகளார் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு பங்கு மக்களின் சார்பாக எங்கள் வரவேற்பும் ,வாழ்த்துக்களும்....

Powered by Blogger.

Blog Archive



வணக்கம் அன்பு நெஞ்சங்களே!!!! வருகைக்கு நன்றி.... தங்களின் மேலான கருத்துக்களையும் வரவேற்கிறோம்...